Friday, February 16, 2018

பல்பு வாங்கிய தருணங்கள்


கிரிக்கெட்டில், வீசப்பட்ட பந்து, பேட்ஸ்மேனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, வேறு திசையில் திரும்பி எகிறுவதை கூக்லி என்பர்.

இதுபோன்ற அனுபவம் நமக்கும் சில சமயங்களில் ஏற்பட்டிருக்கும். நம் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஒரு விஷயத்தின் முடிவு இருக்கும். அதுபோல் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் இவை.

அந்நாட்களில் தூர்தர்ஷனில் உலா வரும் ஒளிக்கதிர் என்ற ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. அதில் தமிழகத்தில் நடந்த சில நிகழ்சிகளின் முக்கியமான பகுதிகளை தொகுத்து ஒளிபரப்புவார்கள். அப்படி ஒருநாள், தொழு நோய் பற்றி நடந்த ஒரு மருத்துவ மாநாட்டில் மருத்துவர் ஒருவர் பேசுவதை காட்டினார்கள். அதில் அவர் தொழு நோய் பற்றி ஆராய்ச்சி செய்ய வெளிநாட்டு மருத்துவர்களும் ஆராய்சியாளர்களும் இந்தியாவிற்கு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். அதை கேட்டதும், ஆஹா! வெளிநாட்டினரெல்லம் இங்கு வரும் அளவுக்கு தொழு நோய் ஆராய்ச்சியில் நம் நாடு அவ்வளவு முன்னேறிவிட்டதா என்று நினைத்து பெருமிதம் கொண்டேன். ஆனால், அந்த பெருமை ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த வரியில் அவர் சொன்னது, ஏனென்றால் அந்த நாட்டிலெல்லாம் தொழு நோயே கிடையாது. அதை கேட்டதும் நொந்து போய்விட்டேன். செம கூக்லி இல்ல.

அடுத்ததை கேளுங்கள். சென்னை வானொலியில் உங்கள் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி வரும். இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் நேயர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதில் நேயர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஊர் பெயர்களை சொல்லி, இவர்கள் விரும்பி கேட்ட பாடல் என்று அறிவித்து பாட்டு போடுவார்கள்.

இதை பார்த்து ஒரு அற்புதமான சாக்லேட் விளம்பரம் உருவாக்கினார்கள் இருபது வருடங்களுக்கு முன். முதல் முறையாக அந்த விளம்பரத்தை கேட்பவர்கள் யாருமே எமாந்து போவர்கள். அந்த விளம்பரத்தில் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் வருவது போலவே பெயர்களும் ஊர் பெர்யர்களும் வாசித்த பின் இவர்களெல்லாம் தயவுசெய்து என் பெண்ணை follow செய்யாதீங்க என்று ஒரு அப்பா சொல்வது போல் முடியும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்களும் அந்த விளம்பரத்தை உருவாக்கியவரின் ஆக்கத் திறமையை பாராட்டுவீர்கள். சரி, அந்த சாக்லேட்டின் பெயர் என்ன தெரியுமா? கூக்லி.


இவை தான் அந்த கூக்லி சாக்லேட் என்று நினைக்கிறேன். இதுவரை அந்த சாக்லேட்டை நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?


10 comments:

  1. பல்பு நன்றாகவே வெளிச்சமிருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. வெளிச்சமா எரிகிற பல்பை தானே தேடித்தேடி வாங்குவோம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. ​இரண்டு செய்திகளுமே புதுசு எனக்கு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் வலை தளத்திற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேர்க்றேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. வாழ்க்கையில் பல்ப் வாங்காதவர்களே இருக்க முடியாது

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் வலை தளத்திற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேர்க்றேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  4. பல்ப் வாங்குறதாலாம் சர்க்கரை பொங்கல் நமக்கு.

    உங்க இரண்டாவது பல்புக்கான விளம்பரத்தை நான் பார்த்தமாதிரி நினைவில் இல்ல சகோ

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் வலை தளத்திற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேர்க்றேன்.

      இரண்டவது விளம்பரம் எப்.எம் ரேடியோவில் தொண்ணுருகளின் மத்தியில் வந்தது. அதை பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

      Delete
  5. உங்களை பின் தொடர ஆரம்பிச்சாச்சு. இனி பதிவுக்கு தவறாம வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டுகிறேன்.

      Delete