Thursday, February 01, 2018

என்னப்பா, இப்பிடி பண்றீங்களேப்பா!

சில வாரங்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்கட்சியில் கும்பக்கரை தங்கையா படம் ஒளிபரப்பினார்கள். அதில் வரும் ஒரு காட்சியில் போலீஸ் எஸ்.எஸ்.சந்திரனிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்பார் செந்தில். இல்லை என்றதும், அருகில் இருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் இருக்கிறது, நீங்கள் சொன்னால் தருவார் என்று செந்தில் சொல்வார். எஸ்.எஸ்.சந்திரனும் அவருக்கு சிபாரிசு செய்ய, செந்தில் போய் சில்லறைக்கு பதிலாக போலீசின் உறவினர் என்று சொல்லி ஒரு புது சைக்கிளை எடுத்துச் சென்றுவிடுவார்.


அதை பார்த்ததும் உடனே மூளைக்குள் பல்பு எரிந்தது. அடடே! இதே போன்ற காட்சி இன்னொரு படத்திலும் வருமே என்று. யோசித்துப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அந்த படம் விஜய்  நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை.

காட்சி/வசனங்ககளில் ஒரு சில சிறிய மாற்றங்களே. அந்த படத்தில் போலீஸ் என்றால் இதில் டிராபிக் போலீஸ். இதில் பாண்டு டிராபிக் போலீசாக நடித்திருப்பார். அந்த படத்தில் காமெடியன் செந்தில் செய்வதை இந்த படத்தில் ஹீரோ விஜய் செய்வார்.


கும்பக்கரை தங்கையா வெளிவந்தது 1991-ல். கோயம்புத்தூர் மாப்பிள்ளை வெளிவந்தது 1996-ல்.

திருட்டு வீசீடீ மற்றும் இணையத்தில் படம் வெளிவந்தால் எங்கள் உழைப்பு திருடப்படுகிறது என்று கூப்பாடு போடும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இப்படி தங்கள் சகாக்களின் சிந்தனையை திருடி தங்கள் படத்தில் போடுவது சரியா?  காபி அடிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். படம் பார்க்க வரும் மக்களையும், அவர்கள் ஏற்கனவே வேறு படத்தில் பார்த்த காட்சிகளை காட்டி ஏமாற்றுவது ஞாயமா? 

நான் வெகு அரிதாகவே திரைப்படம் பார்ப்பவன் என்பதால் எனக்கு தெரிந்த  காபி அடிக்கப்பட்ட காட்சி  இது ஒன்றுதான்.  இன்னும் நிறையவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னப்பா, இப்பிடி  பண்றீங்களேப்பா!

4 comments:

  1. அவங்கே என்ன செய்வாங்கே... சரக்கு இல்லையே... பாவம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். சொந்த சரக்கு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அப்பட்டமாக அப்படியே காட்சிகளை காபி அடிப்பதையாவது தவிர்க்கலாம். அதற்கு யார் மெனக்கெடுவது என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னமோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. இப்படியும் பலர். சிலர் தமிழ் படங்களிலிலிருந்தே எடுத்துக் கொள்ள, பலர் வேறு மொழி படங்களிலிருந்து சுடுகிறார்கள்.....

    ReplyDelete
    Replies
    1. மக்களிடம்ப பணம் வாங்கிக்கொண்டு பழைய சரக்கையே மீண்டும் தர எப்படித்தான் மனம் வருகிறதோ அவர்களுக்கு. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.

      Delete