Tuesday, May 15, 2018

இசை என்னும் இன்ப வெள்ளம்

சில நாட்களுக்கு முன் எனக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு ஒலிப்படத்தின் (video) யூ டியூப் சுட்டி வந்தது.  சமீபத்தில் வந்த பத்மாவத் படத்தின் கூமர் பாட்டு வீணையில் வாசிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைப்பு சொன்னது. அந்த பாட்டு நன்றாக இருக்கும் என்பதால், வீணையில் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்ற பார்க்கும் ஆவலில் அந்த சுட்டியை தொடர்ந்தேன். 

வாசிப்பை பார்த்து அசந்துபோய்விட்டேன். இப்படி ஒரு திறமையா என்று. கலைஞரின் பெயர் ஸ்ரீவாணி. ஹைதராபதை சேர்ந்தவர். 

நான் ரசித்த அந்த ஒலிப்படம் உங்களுக்காக இதோ. நீங்கள் இதுவரை கூமர் பாடலை கேட்டதில்லை என்றால் முதலில் அதை கேட்டுவிட்டு பின்னர் அந்த பாடலின் வீணையிசை வடிவை கேளுங்கள். உங்களுக்காக இரண்டு ஒளிப்படங்களும் இங்கே.

கூமர் பாடல் (தமிழ்):



கூமர் பாடல் (ஹிந்தி):



வீணையிசை  வடிவம்:



யூ டுயூபில் அவரை பற்றி தேடியபோது, அவரது சேனல் கிடைத்தது. அதில் அவர் பல்வேறு பிரபல பாடல்களை வீணையில் அற்புதமாக வாசித்த ஒலிப்படங்கள் உள்ளன.

அவர் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த மேலும் இரு பாடல்களின்  வீணையிசை வடிவம் உங்களுக்காக. 

மரியான் படத்தில் வரும் "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன" என்ற பாடல் வீனையிசையாக.



அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ" பாடல் வீனையிசையாக.


நீங்களும் இந்த வீணையிசை வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

4 comments:

  1. எத்தனை இரசித்து, நேசித்து செய்கிறார் என்பது ஸ்ரீவாணியின் முகமலர்ச்சியில் தெரிகிறது

    மூன்றாவது மட்டும் வேலை செய்யவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜீ அவர்களே.

      Delete
  2. மிக அழகான பாடல்கள். அவர் வாசிப்பதும் அழகு! அதை அனுபவித்து வாசிக்கிறார். நானும் இவரைப் பற்றி நெட்டில், யுட்யூபில் அறிந்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா அவர்களே.

      Delete