Wednesday, January 31, 2018

காரணமின்றி காரியமில்லை

shoulderless, top, midi, தோளில்லா மேல் ஆடை, மிடி,

சில நாட்களுக்கு முன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கண்ட காட்சி இது. அப்போது இரவு மணி எழரை இருக்கும். ரஜெளரி கார்டன் நிலையத்தை ரயில் அடைந்தபோது எதிர்புற மேடையில் ஒரு இளம்பெண் தன் ஆண் துணையுடன் நின்றுகொண்டிருந்தாள். அவன் ஜனவரி மாத மாலை நேர குளிரை தாக்குப்பிடிக்க 2 ஸ்வெட்டர்கள் அணிந்திருக்க, அவளோ தோள் பகுதி இல்லாத மேல் ஆடையும் முட்டிக்கு மேல் முடியம் ஒரு இறுக்கமான மிடியும் மட்டுமே அணிந்திருந்தாள்.

இங்கே இருக்கும் குளிருக்கு அத்தனைபேரும் முகத்தை தவிர தலை முதல் பாதம் வரை மூடிக்கொண்டு திரிய, அவள் மட்டும் அவ்வாறு குளிருக்கான எந்த உடையும் அணியாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. உச்சகட்ட குளிர்காலத்திலேயே இப்படி காற்றாட ஆடை அணிந்தால் வெயில் காலத்தில் என்ன உடுத்துவாளோ. யோசிக்கக்கூட முடியாது போலிருக்கிறதே.

அந்தப் பெண்ணைப் பார்த்ததும், பேய் படங்களில், புதைக்கப்பட்ட எழும்பக்கூடு திடீரென்று பூமியை பிளந்துகொண்டு வெளியே வருவது போல, பல வருடங்களுக்கு முன் சேனல்கள் தாவிக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு திரைப்பட காட்சி, நினைவுக்கு வந்தது.

girls group, கல்லூரி மாணவிகள்

அந்தக் காட்சியின் சாரம்சம் இதுதான். கல்லூரி மாணவிகள் மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வார்கள். ஒரு இடத்தில்  ஸ்வெட்டர் அணிந்த சில மாணவிகள் உட்கார்ந்து அரட்டை அடிதுக்கொண்டிருக்க, ஸ்வெட்டர் அணியாத அறைகுறை ஆடை அணிந்த மாணவி ஒருத்தி அந்தப்பக்கம் வருவாள். கூட்டத்தில் இருக்கும் ஒருத்தி அவளுக்கு குளிரவில்லையா என்று கேட்க, அதற்கு அவள், “நீங்கல்லாம் வெளிய ஸ்வெட்டர் போட்டிருக்கீங்க நான் உள்ள ஸ்வெட்டர் போட்டிருக்கேன்” என்று சொல்லி மறைத்து வைத்திருக்கும் மது / மது கலந்த குளிர்பான புட்டியை எடுத்து காட்டுவாள்.

எதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சில நொடிகள் நான் அந்த படக்காட்சியை பார்த்ததற்கு காரணம் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்ணை சூழலுக்கு பொருந்தாத உடையில் பார்த்து உங்களுக்கு இந்த பதிவின் மூலம் நான் சொல்லவேண்டும், அதை நீங்கள் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் போலிருக்கிறது.

யாருக்குத் தெரியும்? நீங்கள் இதை படிப்பதற்கும் உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்கு காரணமாக இருக்கலாம்.

படங்கள் கொடுத்து உதவியது கூகிள் 

4 comments:

  1. எல்லாம் அவன் செயல் இச்செயலை நாங்கள் படிக்க வேண்டும் என்பதும் விதியோ....

    ReplyDelete
    Replies
    1. விதி வலியதுனு சும்மாவா சொல்லியிருக்காங்க :-).வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

      Delete
  2. மெட்ரோவில் வரும் இளைஞர்கள் உடை - ஒன்றும் சொல்வதிற்கில்லை. குளிர்காலத்திலும் இப்படி உடை அணிந்து கொள்வது எப்படி முடிகிறதோ....

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வீட்டினரும் எப்படி சும்மா இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.

      Delete